SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕நீயே என் இதயமடி -14💕💕

  வீட்டில் உள்ள அனைத்து வேலைக்காரர்களையும் லீவு குடுத்து அனுப்பிவிட்டு , மது சொன்ன வேலைகளை செய்ய தயாரானார் வளர்மதி. வயதானாலும் வீடு வேலைகளை அவர் தான் செய்துவந்தார். வீட்டை கூட்டி பெருக்கவும் , துணி துவைக்கவும் மட்டுமே வேலைக்காரர்களை வைத்துஇருந்தார். வாட்ச்மன் வாரத்தில் ஒரு நாள் தோட்டத்தை சுத்தம் செய்து கொடுத்துக்கொண்டு இருந்தான். கல்யாண வேளையில் அனைவரும் நிறைய வேலை செய்ததால் சம்பளத்துடன் ஒரு வார விடுப்பு குடுத்து அனுப்பி வைக்க சொன்னாள் மது.
வளர்மதியும் சரி என்று செய்தபிறகு , " மாமியாரே .. நீங்க போய் எல்லா ரூமையும் கண்ணாடி மாறி கூட்டி தொடச்சுவிடுங்க... மதியம் சமையல் நீங்க தான்..நாக்கு செத்துப்போச்சு.. சோ நல்ல காரசாரமா சமையலை அசத்திடுங்க.." என்று தன்னுடைய ரூமில் அடைந்து கொண்டாள். அருணிற்கு கால் செய்து மதியம் சாப்பிட வரவேண்டும் என்று அழைத்தாள். 
  அருண் ," சொல்லு டி பொண்டாட்டி .. என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?"மது ," இப்போதான் பாதி ரூம் சுத்தம் செஞ்சேன் . இனிமேல் போய் சமைக்கணும்.. மதியம் சாப்பாட்டுக்கு வந்துடு.. உனக்கு பிடிச்ச பாயசம் பண்ணிவச்சுஇருக்கேன் .."
'நீ எதுக்கு ரூம் எல்லாம் சுத்தம் செய்யுற.. அதுக்குதான் ஆளுங்க இருக்காங்களே "
"இருந்தாங்க .. அத்தைதான் எல்லாத்துக்கும் ஒரு வாரம் லீவு குடுத்து அனுப்பிச்சுட்டாங்க..""எதுக்காம் "
"கல்யாணவேளைல எல்லாரும் நிறைய வேலை பார்த்தர்களாம். அதுனால லீவு குடுத்துஇருக்கு , ஒரு வாரத்துக்கு என்னவே எல்லா வேலையும் பார்க்க சொல்லிட்டாங்க." என்று சோகமாக கூறினாள். அருண் எதுவும் கூறாமல் இருக்க , "சரி நான் போய் வேலையை பார்க்குறேன் .. " என்று காலை கட் செய்தாள்.
சிறிது நேரம் கழித்து , வெளியே வந்த அவள் மாமியார் செய்யும் வேலைகளை பார்த்து ஒரு பக்கம் மனம் கனிந்தாலும் மறுநொடியே இறுகியது. அவளே சமையல் செய்து வைத்துவிட்டு, அதில் மாமியாரை உப்பு மட்டும் கொஞ்சம் அதிமாக போட்டுடுங்க.. அப்புறம் நீங்க போய் குளிச்சுட்டு பிரெஷ்ஷா இந்த வேலை செய்த சுவடே இல்லாம அழகா உட்கார்ந்து இருக்கீங்க.. நான் சொன்னதும் நீங்க போய் உப்பு கொஞ்சமா சேர்க்குறீங்க சாம்பார்ல மட்டும். சரியா மாமியாரே ..அருண் ரூமை அப்புறம் சுத்தம் செய்துக்கலாம்.." என்று அங்கே இருந்து நகர்ந்துவிட்டாள்.
  அவள் குளித்துவிட்டு , பால்கனியில் முடி உலர்த்திவிட்டு, அருணின் வரவை எதிர்பாத்து காத்துஇருந்தாள்.
வளர்மதியும் தயாராகி , மது சொன்னது போல ஹாலில் அமர்ந்து இருந்தார். அருண் கார் , வீட்டிற்கு அருகில் வருவதை அறிந்த மது , வளர்மதியை போய் சமையல் அறையில் உள்ள சாம்பார் மற்றும் பாயசத்தில் உப்பை சேர்க்க சொன்னார். 
அருண் உள்ளே நுழைந்ததும் , சமையல் செய்துகொண்டு இருப்பாள் என்று எண்ணி அங்கே சென்றான். அங்கே அவனது அம்மா , பாயசத்தில் எதையோ கலப்பது கண்டு , அவனது யோசனை சுருங்கியது.
"அம்மா .." என்று அழைக்க , வளர்மதி மதுவின் திட்டத்தை எதிர்பார்த்தபடி , அதிர்ச்சியில் மகனை பார்த்தார்.
 பின் நிதானமாகி , "சொல்லு அருண் "

"இங்க என்ன பண்ணுறீங்க "

"பார்த்த தெரியலையா.. சமையல் பண்ணிக்கிட்டு இருக்கேன். எல்லாம் முடிந்தது.."

"மது சமைக்குறேனு சொன்னா.."
"மது வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு , குளிக்க போனாள் ., அதான் நான் சமைச்சுட்டேன்., ஏன் மது சமைச்ச தான் 
சாப்டுவியோ "
"அப்படி இல்லைம்மா .. சரி சாப்பாடு எடுத்து வைங்க.." என்று நகர , மது ஓடி வந்து ," வந்துடீங்களா .. இருங்க சாப்பாடு எடுத்துவைக்குறேன்.. இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச பாயசம் பண்ணியிருக்கிறேன்.." என்று கூற "நீ தான் சமையல் பண்ணுனியா?எல்லாமே நீதான் பண்ணுனியா " என்று கேள்வி கேட்கும் விதமாக கேட்க , அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள்.அருண் தனது அம்மாவை நோக்கி ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு அமைதியாகினான்."அத்தை உப்பு, காரம் எல்லா சரியா இருக்கா அத்தை.. " என்று கேட்க , " எல்லாம் சரியா இருக்கு" என்று கூறி தனது ரூமில் அடைந்து கொண்டார்.மகனின் வெற்று பார்வை அவரை அசைத்தது. மகனிற்காக அதை தாங்கிக்கொள்ள முடிவு செய்தார். எதற்காக மது இப்படி செய்கிறாள் என்று அவர்க்கு புரிந்தது.. மகனை அவள் மட்டுமே சொந்தம் கொண்டாடநினைக்கிறாள். அவன் மீது உள்ள காதலால் தானே இவ்வாறு நினைக்கிறாள் என்று எண்ணி நான் அவளுக்கு கெட்டது செய்யப்போவதில்லை , அருணை பிரிக்க போவதில்லை என்பதை அவளுக்கு புரிய வைத்துவிடலாம் என்று மனக்கோட்டை காட்டுகிறார் .. பாவம் அவர் அறியவில்லை , அருணின் முதல் எதிரியே மது என்பதை ......

  அருண் சாப்பிட அமர்ந்ததும் , அனைத்து உணவுகளையும் எடுத்து வைத்து , அவனுக்கு பரிமாறினாள் மது..
முதலில் பாயசத்தை தர , அதை சாப்பிட்டவன் முகம் அஷ்டகோணல் ஆகியது. இருந்தாலும் அதை சாப்பிட்டுவிட்டு , அமைதியாக எல்லாவற்றையும் சாப்பிட்டான். ஆன்லைனில் ஆர்டர் செய்து அவளுக்கு பிடித்த பிரியாணியை வரவைத்து குடுத்தான். மது அதை சாப்பிட்டிவிட்டு அவனுக்கும் ஊட்டிவிட்டாள். அம்மாவிற்கு தயிர் சாதம் செய்து தர சொல்ல , மதுவும் செய்து தந்தாள். அதை எடுத்துக்கொண்டு , அவனது அம்மாவின் அறைக்கு சென்று அவர்க்கு அளித்தான்." நீங்க செய்ததா சொன்னா உப்பு கலந்த சாப்பாட்டை நான் சாப்பிட்டுவிட்டேன்.. எதுக்கு அம்மா இப்படி பண்ணுனீங்க ""அது .. நான் .. மதுதான் .." என்று திணற ," மது உப்பு போடுங்க அப்படினு சொன்னாலும் , பாயாசத்துல எப்படி உப்பு போடுவீங்க." என்று கேட்க , அவரும் எதுவும் பதில் பேசாமல் அமர்ந்து கொண்டார். அருண் " என்னோட நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமா சிதறடிக்குறீங்க மா .. அவள் என்னை உங்களிடம் இருந்து பிரிச்சு கூட்டிட்டு போகமாட்டாள்.. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் . போதும் மா .. இதோட விட்டுடுங்க.." என்று கை எடுத்து கும்பிடும் மகனின் நிலையை தேற்ற முடியாமல் அமைதியாக இருந்தார்.

  அருண் அலுவலகத்திற்கு சென்றதும் , மது வளர்மதியிடம் ," சூப்பர் அத்தை .. இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் ..சாப்பிடுங்க .. சாப்டுட்டு அருண் ரூமை சுத்தம் செய்துவிட்டு , சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை துலக்கிவிட்டு ,போய் ரெஸ்ட் எடுங்க.." என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள்.
வளர்மதியும் சாப்பிட்டுவிட்டு , அருண் ரூமிற்கு சென்றார்.. அங்கே சுத்தம் செய்யும் போது படுக்கை அருகில் தலைகீழாக இருந்த போட்டோவை பார்த்தார்.. அதேநேரம் எப்பதும் மது வைத்துஇருக்கும் போட்டோவை காணாமல் தேடிக்கொண்டு இருந்தாள்.. அவளது கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. 'என்கிட்ட இருந்த ஒரே போட்டோ அதுதானே ' என்று தேடிக்கொண்டு இருந்தாள்.அத்தை கிட்ட கேட்போம் என்று அருணின் ரூமிற்கு சென்றாள்.

வளர்மதி , அந்த போட்டோவை திருப்பி பார்த்ததும் அதிர்ச்சியானார். அவரது வாய் ' விக்ரம் ' என்று முனுமுனுத்தது. 

எப்படி இங்கே அருணின் ரூமில் என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு ,  அதை கிழித்து குப்பையில் போட்டார்     
எப்படி இங்கே அருணின் ரூமில் என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு , அதை கிழித்து குப்பையில் போட்டார். அவர்க்கு இன்னும் அந்த படத்தை பார்த்த படபடப்பு நீங்கவில்லை.. தண்ணீரை குடித்துவிட்டு , தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டு , மீண்டும் சுத்தப்படுத்த முனைந்தார். சரியாக அந்த போட்டோவை கிழிக்கும் போதும் பார்த்த மதுவிற்கு நெருடியது.. எதற்காக விக்ரம் போட்டோவை பார்த்து அவர்கள் இப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் .. ஒருவேளை விக்ரமை இவர்களுக்கு முன்னமே தெரியுமோ .. இப்படி பல கேள்விகள் அவளிடத்தில்.. இதை எல்லாம் அறியும் நோக்கில் அவளது சிந்தனை செல்ல , அவளது கால்கள் தோட்டத்தை நோக்கி சென்றது..
💕💕நீயே என் இதயமடி -14💕💕 💕💕நீயே என் இதயமடி -14💕💕 Reviewed by SaraThas on December 15, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.