SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

நினைவெல்லாம் நீயே - பகுதி 2


கண்ணீரில் வாழ்க்கை

சிவரஞ்சன் , அமிர்தா ( புது மனைவி ), ரோஹன் ( அமிர்தாவின் மகன் ), நாதன் ( வேலைக்காரன் ), ஜோதி அனைவரும் புதிய வீட்டிற்கு மாறினார்கள்.. ஜோதிக்கு வேலைக்காரர்கள் தங்குமிடம் அளிக்கப்பட்டது. நாதனை தவிர, அங்கு உள்ள அனைவருக்கும் அவள் ஒரு வேலைக்காரி என்றே பதிய வைத்தனர். அவள் மனதிலும் தான் ஒரு வேலைக்காரியே என்ற எண்ணம் பதிந்து போனது. அம்மா எங்கோ உயிரோடு இருக்கிறார்கள்.. மீண்டும் ஒரு முறையாவது அவர்களை பாத்துவிடவேண்டும் , அவர்கள் மடிமீது தலை வைக்க வேண்டும் , அவர்கள் எனக்கு சாப்பாடு ஊட்டிவிடவேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாக கொண்டு இங்கு அனுபவிக்கும் கொடுமைகளை சகித்துக்கொண்டு இருந்தாள்.
சிலருக்கு பிறப்பிலேயே சில குணங்கள் வந்துவிடும்... சில குணங்கள் சுற்றி உள்ளவர்களை பார்த்து , அவர்கள் செய்த வினைக்கு எதிர்வினையாக செய்வது நமது பழக்கமாகிவிடும்.
அதேபோல பிறப்பிலேயே பொறுமை கொண்டு பிறந்த ஜோதி, தனது சிற்றன்னையின் கொடுமையில் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொண்டாள்( புரிந்து அல்ல .. பயத்தினால் )...
பள்ளி செல்வது நிறுத்தப்பட்டது ..அவளுக்கு என்று சில பழைய துணிகள் 4 செட் வழங்கப்பட்டது..
காலை 5 மணிக்கு எழுந்து , தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வைத்துவிட்டு சமையலறைக்கு பின் புறம் உள்ள இடத்தில் காத்துஇருக்க வேண்டும்..
தோட்டக்காரனுக்கு , கார் துடைப்பவருக்கு ,இப்படி யார் கூப்பிட்டாலும் அவள் போய் வேலை செய்யவேண்டும்..சிலர் வேண்டும் என்றே அவளுக்கு அதிக வேலைகளை கொடுப்பார்கள்.
காலை 7 மணிக்கு , அனைவரது செருப்புகளையும் துடைத்து பாலீஷ் செய்து வைக்க வேண்டும்..
எந்த மாறி எடுத்தாலோ அதே போல் வைக்க வேண்டும். மாற்றி வைத்தால் அதை பார்க்கும் அனைவரும் அவளை அடித்து, கொட்டி விட்டு செல்வார்கள்..
அமிர்த மேடத்தின் அனுமதியில்லாமல் அவள் வீட்டிற்குள் நுழைய கூடாது என்பது அவளை பொறுத்தவரை எழுதப்பட்ட சட்டம். அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.. வேலைக்காரர்களும் சாப்பிட்டுவிட்டு மீதி எஞ்சி உள்ளதை அவளுக்கு தருவார்கள்.. ஒரு நாளைக்கு அரை பானை தண்ணீர் + அவர்கள் தரும் சாப்பாடு ..
அதை அவள் அறைக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள் . இதற்கு இன்ச்சார்ஜ் நாதன்..
கேட்பாரற்று கிடக்கும் ஒருவரை யார் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் அதை அருகில் உள்ளவர்கள் தட்டி கேட்கமாட்டார்கள்   அதிலும் ஒரு பெண், குழந்தை பருவம் முதல் துன்பத்தை அனுபவித்து வளர்ந்து வருவது அவள் மனதில், உடம்பில் எந்த மாறி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடுகின்றனர்.
நாதன் , அவளுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பான். அவளுக்கு என்று தட்டு கிடையாது. அவள் இருக்கும் அறை , அதை அறை என்று சொல்ல முடியாது.. பழைய ஒடிந்த சாமான்களை போட்டு வைக்கும் அறையில் ஒரு இடம் ஒதுக்கி சுத்தப்படுத்தி தனக்கென்று வைத்துஇருந்தாள்.
அவன் தட்டில் உள்ளவற்றை அங்கே கொட்டிவிட்டு சென்று விடுவான். அதை அவள் முழுவதுமாக சாப்பிடவேண்டும்..
உடம்பு சரியில்லை என்றால் , அவளுக்கு கொஞ்சம் கருணை காட்டப்படும்.. அதுவும் அவள் உயிர்க்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று தானே தவிர , மற்ற காரணங்கள் இல்லை..
ஒருமுறை , அவள் அதே ட்ரிக்க்கை உபயோகப்படுத்த , அவளை குடோனில் தள்ளி 2 நாள் முழுக்க பட்டினி போட்டனர்.. அதில் இருந்து அவளுக்கு குடோன் என்றாலே பயம் வந்தது..             
அமிர்தாவிற்கு எப்பொழுது எல்லாம் அவளை துன்புறுத்தி விளையாடி பார்க்கவேண்டும் என்று எண்ணம் வருகிறதோ அப்போது மட்டும் அவளை வீட்டிற்குள் அனுமதித்து , அவளுக்கு வேலைகள் இடுவாள்.. சரியாக செய்தாலும் அவளுக்கு தண்டனை உண்டு..
அடிமையாக வாழ்ந்து வருபவளுக்கு அடிமை சின்னம் இல்லையே என்று நாதன் மூலம் அவளுக்கு அடிமை என்று கைகளில் பச்சை குத்தி பார்த்தாள்..
அவளது அப்பா , தன் மகள் என்ற பாசம் இல்லாமல் , அவன் கார்டெனில் இருந்து மது அருந்தும் போது , ஜோதியை வைத்து வேலை வாங்குவான்.. போதையில் அவளை அடித்து துன்புறுத்துவான்.. கோபமும் ஒருவிதமான போதை தான்.. தன்னிலை மறக்க செய்யும்.. எல்லாவற்றையும் ஜோதி பொறுத்துக்கொண்டு இருந்தாள். சிலசமயம் தப்பிக்க முயற்சி எடுத்ததும் அதனால் நாய்களை விட்டு கடிக்க வைத்து எல்லாரும் சிரித்தது ஞாபகம் வந்தது.
ரோஹன் - ஜோதி என்ற ஒரு ஜீவன் அந்த வீட்டில் இருக்கிறது என்று அறியாமல் செல்வச்செழிப்புடன் ஆணவத்துடன் வளர்த்துக்கொண்டு இருந்தான்..
சிவமிர்தா என்னும் சிமி - சிவா-அமிர்தாவின் செல்ல புதல்வி.. அவளுக்கும் இப்படி ஒன்று நடப்பது தெரியாது.. தெரிந்தாலும் அவளும் ஜோதியை துன்புறுத்துவாளே தவிர , இரக்கம் என்னும் குணம் பிறவியிலும் இல்லை , வளர்ப்பிலும் இல்லை .. அவள் அப்படியே அமிர்தாவின் மறுபிறப்பு..
சிமி , தோட்டத்தில் விளையாடும் போதும் , வெளியே உலவும் போதும் குடோன் தான் ஜோதியின் அறை..    
இப்படியே பல இன்னல்களுக்கு நடுவில் , காலமும் கடந்தது..
சமையல்காரி , ஜோதியை பார்த்துவிட்டு , அமிர்தாவிடம் கூற அவள் அதற்கு ஒத்துக்கொண்டாள்..
இனி ஜோதி ,குழந்தை அல்ல , பருவ மங்கை.. அவளுக்கு வேலைக்காரியின் பழைய துணிகள் தரப்பட்டது. சில அறிவுரைகளும்..
அமிர்தாவின் அதட்டலுக்கு பயப்படாமல் , அங்கே வேலை செய்தவர்கள் , இந்த தருணத்தில் நன்றக சாப்பிட வேண்டுமென்று நேரத்துக்கு ஆகாரம் குடுத்தார்கள்.. நாதனும் சரி என்று கண்டும் காணாமல் விட்டுவிட்டான்..
அவளுக்கு புது உடை , ஐந்து வருடத்திற்கு பிறகு , முதல் முறையாக புது உடை அணிகிறாள்..
எலும்பு போல் காட்சி அளிக்கும் அவள் உடம்பில் சிறிய சந்தோசத்தின் வெளிப்பாட்டால் அவள் முகம் மின்னியது.. இதை கவனித்த இரண்டு கண்கள் ஆச்சர்யம் அடைந்தன..
காலம் யாருக்காகவும் காத்துஇருக்காது என்பது போல , இதோ 10 வருடம் கடந்துவிட்டது..
ஜோதியின் வயது - 18,
ரோஹனின் வயது - 20
சிமி - 11

ஜோதி, தற்போது எல்லாவற்றையும் பழகிக்கொண்டாள்.. ரோஹனும் சிமியும் அவளை வேலைக்காரி என்று நினைத்து ஒதுங்கி கொண்டனர்..
அவளுக்கு இடும் வேலைகளை முடித்துவிட்டு , கடவுளை துதிப்பாள்.. இருக்கின்ற ஒரே துணை என்று..
நாதன் , அமிர்தாவிடம் சென்று ஜோதியை தனக்கு மணம் முடித்து தருமாறு கேட்க , அமிர்தாவும் யோசித்துவிட்டு சரி என்றாள்... ஜோதியை விட 2மடங்கு அதிகம் வயதுள்ள ஒருவனுக்கு கல்யாணம் செய்து குடுக்க எப்படி தான் மனசு வந்ததோ.. நாதனின் வயது- 46
நாதன் அவளை கல்யாணம் செய்து கொண்டு அவளுக்கு நல்ல துணி , சாப்பாடு வாங்கி மனைவியாக பார்த்துக்கொள்ள எண்ணுகிறான்.. இருந்தாலும் மகளின் வயதுள்ள ஒரு பெண்ணை அடைய நினைப்பது எந்த உலகிலும் ஏற்றுக்கொள்ள முடியாது..
ஒருநாள் ... ஜோதி வேலை செய்துகொண்டு இருக்கும்போதே மயக்கம் போட்டு விழ , அவளை பரிசோதித்த டாக்டர் , அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்ற குண்டை தூக்கிபோட்டுவிட்டு சென்றார்..
மயக்கத்தில் இருக்கும் அவளை முறைத்துவிட்டு , நாதனை எரிப்பது போல பார்க்க , "நான் ஒன்றும் பண்ணவில்லை " என்று அமிர்தாவின் காலில் விழுகிறான்..

அப்போது அவள் கர்ப்பத்திற்கு யார் காரணம்...........................................

நினைவெல்லாம் நீயே - பகுதி 2 நினைவெல்லாம் நீயே - பகுதி 2 Reviewed by SaraThas on December 08, 2018 Rating: 5

Post Comments

No comments:

Powered by Blogger.