"டேய் இன்னைக்கு ஆபீஸ் விட்டு சீக்கிரம் வந்துடு.. ஊருக்கு போகணும் " என்று சத்தமிட,
"ஹ்ம்ம் சரி மா.." என்று சலிப்புடன் கிளம்பி சென்றான்.
" என்னப்பா தம்பி ரொம்ப சலிச்சுக்குற..உனக்கு தான் பொண்ணு பார்க்கப்போறோம். அதுவும் நீ கேட்டபடி கிராமத்துல ..என்ன ஊரு அது ...பாலப்பம்பட்டி.. பக்கத்துல நெறைய இடம் இருக்காம் சுத்திப்பார்க்க , அதுனால நீ அந்த பொண்ண ஓகே பண்ணிடு. நான் உன்ன வச்சு ஊட்டி கொடைக்கானல் ,டாப்ஸ்லிப் , வால்பாறை ,மூணார் இப்படி எல்லா இடத்தையும் பார்த்துட்டு வந்துடுறேன் " என்று நந்தினி மண்கோட்டைகளை கட்டினாள்.
"நீ ஊரு சுத்திபாக்குறதுக்கு நான் ஓகே சொல்லனுமா..முடியாது போடி.."
நந்தினி ,"அப்போ அந்த பொண்ண உனக்கு பிடிக்கல .. நீ கேட்டமாறி அந்த பொண்ணு அத்தனையும் பொருந்தியிருக்கே "
கிரிஷ் ," நீ அந்த பொண்ணை பார்த்தியா?"
நந்தினி ," பார்த்தேன் .."
"பொண்ணு எப்படி நல்லாயிருந்தாச்சா?"
"ஓகே பரவலாமா இருக்கு .."
"எனக்கு காட்டுடி "
"தம்பி உனக்கு இது 87 வைத்து பொண்ணு .. போட்டோ பாத்து அது இதுனு குறை சொல்லிட்டே இருந்த உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.. அதுனால நல்ல பிள்ளையா, நான் சொல்லுற மாறி கேளு ."
"இதெல்லா போங்கு.. கட்டிக்கப்போற எனக்கு பொண்ண காட்டமாட்டேனு சொல்லுறீங்களே .."
"அதை நீ கட்டிக்கிட்டு பாரு .. உனக்கு இந்த பொண்ணு தான் .. எங்க எல்லாத்துக்கும் பிடிச்சுயிருக்கு .. நாம நாளைக்கு போறோம் .. பொண்ணு வீட்டுக்காரங்க உன்ன பாக்கணும்னு சொன்னாங்க.. அதுனால தான் தம்பி நீ எங்க கூட வர.. இல்லேன்னா உனக்கு பொண்ணு பார்க்குற வேலையே இல்லை.. "
" உங்களை எல்லாம் .." என்று திட்ட வந்தவன் , கையில் இருந்த பேக்கை வைத்து தன் தலையிலே அடித்துக்கொண்டு கிளம்பினான்.
வெளியே சென்றதும் தான் , நந்தினி தன்னை தம்பி தம்பி என்று அழைத்தது ஞாபகம் வர , " இருடி குள்ளச்சி .. நைட் வந்து அடிக்கறேன்" என்று திட்டிக்கொண்டே சென்றான்.
இத்தனை நாளா, எதாவது சொல்லி எல்லாபொண்ணுகளையும் ரிஜெக்ட் பண்ணிட்டோம். இவை எப்படி இருப்பாளோ.. ஒருவேளை அருக்காணி மாறி வந்துட்டா... வேண்டாம் .. எதையும் யோசிக்கவேணாம் ..நாளைக்கு போறோம் .. பார்க்குறோம் .. பிடிச்ச ஓகே .. இல்லேன்னா அங்க இருந்து திரும்பி வந்துடுறோம்.. என்று முடிவு எடுத்துவிட்டு சென்றான்..
"எல்லா எடுத்துவச்சுகிட்டியா ?"
"நந்தினி அத பண்ணு..."
"என்னங்க காஸ் எல்லாம் ஆப் ஆகியிருக்கானு பார்த்துட்டு வீட்டை பூட்டுங்க.."
"டேய் , வண்டி வந்துடுச்சா " என்ற அனைத்து விதமான பரபரப்பில் அனைவரும் கிளம்பி ரயில் நிலையம் சென்று அங்கே இருந்து பழனி செல்வதற்காக ட்ரெயின்- ல் சென்றனர்.
மறுநாள் காலை அனைவரும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வர, அங்கே ஒரு பெண் , ஒருவனை பிரட்டி எடுத்துக்கொண்டு இருந்தாள்.. அவளின் முகத்தை பார்க்காமலே ,
கிரிஷ் ," யெம்மாடி.. என்ன அடி அடிக்குறா..நல்லவேளை இந்த மாறி பொண்ணு நமக்கு இல்ல " என்று கூறிக்கொண்டே வெளியேற ,
'என்ன ஒளறுறான் ' என்று அவன் பார்த்த திசை பக்கம் பார்த்த நந்தினி , ஒரு பெண் , பையனை அடிப்பதை கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அந்த பெண் திரும்பி , அடிவாங்கியவனை நோக்கி ," மறுபடியும் எதாவது வாலாட்டுனா, மவனே நீ காலிடா" என்று சத்தமாக கத்திவிட்டு அங்கே இருந்து சென்றாள் அந்த புதியவள்.
அந்த புதியவள் முகத்தை பார்த்த நந்தினி , ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நிற்க ," நந்து மா , உன்னோட வாயை கொஞ்சம் கிளோஸ் பண்ணுறியா.. எதாவது வாய்க்குள்ள போய் அதுக்கு எதாவது ஆகிடப்போகுது "
"அண்ணா ..அந்த பொண்ணு " என்று நடந்ததை கூற வந்தவள் ,
"அது பொண்ணு இல்லம்மா.. அது ஒரு ரவுடி.. தூள் படத்துல மட்டும் தான் நான் சொர்ணக்காவை பார்த்து இருக்கேன் .. இன்னிக்கு நேருலயும் பார்த்துட்டேன் .."
"என்ன பேச விடுடா ..அவங்க பாத்தியா "
"முகத்தை பார்க்கலை அவ பேச்சு நமக்கு எதுக்குடி ..அவளை பார்த்தகல்யாணம் ஆகுளேனு நினைக்குறேன் ..அவளை எல்லாம் ஒருத்தன் கட்டி மேய்க்க முடியுமா .. பாவம் அந்த அப்பையன் " என்று கூற அவனின் கிண்டலை நினைத்து , உனக்கு இந்த பொண்ணு தான் சரியான ஜோடி .. அந்த அப்பாவி பையன் நீதான் என்று நினைத்து அவனுடன் வளவளத்துக்கு கொண்டே வெளியே சென்றாள்.
உன் விழியசைவில் நான் - 2
Reviewed by SaraThas
on
December 18, 2018
Rating:
Reviewed by SaraThas
on
December 18, 2018
Rating:

Sema update..
ReplyDeleteThank you
DeleteSuperb sis intresting
ReplyDeletethanks sis
DeleteSema update
ReplyDeletethank u
DeleteNext ennachi
ReplyDelete