SaraThas Blog

தலை குனிந்து என்னை பார் ,தலை நிமிர வைக்கிறேன் - புத்தகம்

💕💕நீயே என் இதயமடி -15💕💕

விக்கிரமனின் நினைவுகள் அவளை ஆட்கொள்ள , தோட்டத்தில் உட்கார்ந்து , தனது கடந்த காலத்தை நினைத்துப்பார்த்தாள். அலைகளை போல, மனதிலும் அவனும் தானும் சேர்ந்து இருந்த நிகழ்வுகள் வர , வெளிவர துண்டித்துக்கொண்டு இருக்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு , மனதை கல்லாக்கிக்கொண்டு தனது ரூமிற்கு சென்றாள். விக்ரமனின் படத்தை ஏன் கிழிக்க வேண்டும் என்ற கேள்வி மட்டும் அவளை குடைத்துக்கொண்டு இருந்தது. ஒருவேளை அவள் நேரடியாக வளர்மதியிடமே கேட்டுஇருந்தால் , பின்னால் நிகழ இருக்கும் சில துயரமான சம்பவங்களை தவிர்த்து இருக்கலாமோ.. ஆனால் மதுவின் மூளைதான் தனாவிடம் கொடுத்துவிட்டாளே.. அவனின் கைபொம்மையாகி போனாளே.
தனாவிற்கே போன் செய்து கேட்க, அவனும் அவளுக்கு இன்னும் பழிவெறி ஏறுவதுபோல , கதையை திரித்துக்கூறினார். அதனை நம்பி , மது மீண்டும் தனது தலையிலே மண் வாரி இறைக்க போகிறாள்.

 நாளுக்கு நாள் மதுவின் அட்டகாசம் அதிகரிக்க , வளர்மதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவளின் நோக்கம் என்ன என்பதும் தெரியவில்லை. விடுமுறை முடிந்து வந்த வேலைக்காரர்கள் வர , மது நல்ல மருமகளாக தன்னை காண்பித்துக்கொண்டாள். மாமியார் கொடுமை செய்வதுபோல வெளியே தெரியச்செய்தாள்.
மீண்டும் நாற்பது நாட்கள் விரதம் என மகனையும் மருமகளையும் பிரித்து வைக்க , வேலைக்காரர்களுக்கு இதுவே வெறும் வாயில் மெல்லுவதற்கு ஏதுவாக இருந்தது. இவை எல்லாம் மதுவின் ஏற்பாடுதான். வளர்மதி ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டார். மகனின் மீது காதல் உள்ளவள் , கணவன் -மனைவி உறவை தவிர்ப்பாளா? ஒரே அறையில் இருப்பதை கூட தவிர்க்கிறாளே என்று அவருக்கு புரியவில்லை. 
 அருண் தான் பாவம் இடையில் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டு இருக்கிறான். அன்னையின் பாசமும் மனைவியின் மேல் உள்ள காதலும் அவனை குழப்பியது. மனத்தெளிவில்லாமல் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது. அவனது தொழிலும் அவனது கவனம் சிதறியது. அங்கு உள்ள கோபதாபங்களை வீட்டில் காட்ட தொடங்கினான். அன்னையின் மீது எரிந்து விழ, மது அவனை சாந்தப்படுத்தி அமைதியாக்கினாள். அவள் நினைத்ததை நடத்திக்கொண்டு இருந்தாள். இருவரின் வேதனை நிறைந்த முகம் அவளுக்கு எந்தளவிற்கு சந்தோசத்தை கொடுத்ததோ , அதே அளவிற்கு அவளுக்குள் வலிக்கவும் செய்தது. காரணத்தை ஒதுக்கிவிட்டு , அடுத்ததாக பெரிய அடியாக குடுக்கும் அளவிற்கு தனாவுடன் சேர்ந்து பிளான் செய்துகொண்டு இருந்தாள்.
  அது யாருக்கு அடியாக இருக்கப்போகிறது ? அருண் அதற்குள் மதுவின் எண்ணத்தை அறிந்துகொள்வானா? இதையெல்லாம் இனிவரும் பகுதிகளில் தெரிந்துகொள்ளலாம்   
அவ பிளான் போடுறதுக்குள்ள , நாம் ஆதி -மதியை பார்த்துவிட்டு வந்துவிடுவோம்.
மதிக்கு ஆபரேஷன்க்கு தேவையான பணத்தை தேடி அழைத்துக்கொண்டு இருந்தான் ஆதி.
அவர்களுக்கு உறவென்று சொல்வதற்கு யாருமில்லை. இருவருமே ஆதவற்றவர்கள். அவர்கள் வளர்ந்த ஆசிரமம் மட்டுமே அவர்களுக்கு உள்ள உறவு.

தனது நண்பர்களின் வட்டத்தில் பணத்திற்கு அலைந்த போதுதான் அவனுக்கு பணத்தின் அருமையை தெரிய வந்தது. எல்லாரும் சேர்ந்து அவனை கேலி கிண்டல் செய்ய , பணத்திற்காக என்னவெண்டாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அவன் தள்ளப்பட்டான்.
ஹாஸ்பிடலில் இருந்த மதி கண்விழித்து பார்த்ததும் , ஆதியை காணாமல் தேடிக்கொண்டு இருந்தாள். அங்கே வேலை பார்த்து வந்த நர்ஸ் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல , அவள் அதை கேட்காமல் அவள் தேடிக்கொண்டு இருந்தாள்.
ஆதி வரும் போது அவளுக்கு பிடித்த இனிப்புகளை வாங்கிகொண்டு வந்தான். 
"மதி இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?"
"ஆதி நீ எங்கடா என்னை தனியா விட்டுட்டு போன . நான் உன்னைத்தான் தேடிடுட்டு இருந்தேன்."
"சரி வா சாப்பிடலாம் "
"சாப்பிடணுமா.. எனக்கு பசிக்குது ஆதி , ஆனா சாப்பிடவே பிடிக்கலை."
"இது உனக்கு பிடிக்கும் ." என்று முதலில் இனிப்பை வைத்தான்.
"சூப்பர் டா.. எனக்கு பிடிச்ச ஸ்வீட் .. " என்று அவசரமாக பசியில் இரண்டு மூன்றை முழுங்க , அவளது வயிற்றில் இருந்த குட்டியோ அவற்றை வெளியே தள்ளியது.
அவளுக்கு குமட்டல் அதிகமாகி , வாந்தி எடுத்துவிட்டு சோர்வாக படுக்க , " என்னக்கு என்ன ஆச்சு?, நான் ஏன் இப்படி சோர்வா இருக்கேன் . சொல்லு டா , டாக்டர் எதாவது எனக்கு வியாதி இருக்கும்னு சொன்னாரா ? அப்புடின்னா நான் சீக்கிரமே செத்துப்போயிடுவேனா..?பேசுடா ஏதாச்சும்.."
ஆதி அவளை இருக்க கட்டிக்கொண்டு " அடியே மக்குப்பொண்டாட்டி.. குட்டி மதி வயித்துக்குள்ள இருந்த , இந்தமாறி வாமிட் வரும் .." என்று கண்கலங்க கூறினான்.
"குட்டி மதி ..." என்று கண்கலங்க தனது வயிற்றை தொட்டுப்பார்த்தாள். அவனை மீண்டும் அணைத்துக்கொண்டு அழுது கரைந்தாள்.
உறவே இல்லாதவர்கள் திருமணம் மூலம் ஒன்றை இணைந்து ஒரு புதிய இளம் தளிர் அவர்களின் உறவாய் வருவதை எண்ணி இத்தனை நாள் துன்பப்படுத்திய அனாதை வார்த்தை அர்த்தமில்லாததை மாறியதை உணர்ந்துகொண்டு இருந்தனர்.
"ஆதி ..ஆஆ...தீ.. எனக்கு குட்டி ஆதி தான் வேணும் .. குட்டி மதி அப்புறம் பெத்துக்கலாம் "
"முதல்ல சாப்பிடு .." என்று தோசையை தர , அவள் மீண்டும் வாமிட் எடுத்தாள்.
"இரு நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன் " என்று வெளியேறிய ஆதி , டாக்டரிடம் சென்று ,பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும் துணைக்கு ஒரு பெண்மணி கர்ப்பஸ்திரீயை பார்த்துக்கொள்ள தேவை எனவும் கூற , அவரும் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் பார்வதி. 

"டாக்டர் ,நாங்க டிரீட்மென்ட்க்கு வெளிநாடு போகனும்னு சொன்னீங்க. இவங்களும் வருவார்களா ?"
"முதல என்னை அந்த பொண்ணுகிட்ட கூட்டிட்டுப்போங்க.நான் எப்போ பதில் சொன்ன உங்களால என்ன கூட்டிட்டுபோகமுடியும் ?"
"இன்னும் ரெண்டு நாள்ல சொன்ன நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடுவேன்"
"சரி நான் ரெண்டாவது நாள் சொல்றேன். உங்கள நம்பி நான் அங்க வரை வரணும். அதுனால இந்த ரெண்டு நாளும் நான் உங்க கூட இருக்கேன். அந்த பொண்ண பார்த்துக்கறேன். அதுக்கு அப்புறம் நாம முடிவு பண்ணிக்கலாம் " என்று பார்வதி கூற இருவரும் ஆமோதித்தனர்.
"மதி , இவங்க பேர் பார்வதி , உன்னை பாத்துகிறதுக்கு வந்துஇருக்காங்க "
"வாங்கம்மா .."
பார்வதி அவளை உற்று நோக்கி விட்டு ," நான் வருவதற்கு ரெடி " என்று ஆதியிடம் கூற ,
"எங்கே " என்று மதி கேட்டாள்.
"லண்டனிற்கு " என்று பார்வதி கூற , அவள் அதிர்ச்சியாகி , ஆதியை பார்க்க ,அவன் மெல்ல தலையசைத்தான்.
"எதுக்கு ஆதி ..இப்போ அங்க போய்கிட்டு "
"அங்க ஒரு வேலை கெடைச்சுஇருக்கு .. இனி நம்ம குடும்பம் பெருசாகிடுச்சு..உனக்கு ரெஸ்ட் குடுக்கனும் இந்த வேலை பார்த்த நமக்கு சரியாய் இருக்கும். அதுனால நாம எல்லாரும் கிளம்புறோம் "
"அப்போ சரி .. நீ என்கூடவே இரு அது போதும் .. நீ என்னை இவங்ககிட்ட தனியா விட்டுட்டு போய்டுவியோன்னு தான் ஷாக் ஆகிட்டேன்." என்று சிரித்துக்கொண்டு இருந்தாள்.
ஆதி பார்வதியம்மாவை பார்த்து ஜாடை செய்து வெளிய வரச்சொன்னான்.
"அம்மா அவளுக்கு எதுவும் தெரியாது. நாம அங்க போய் டிரீட்மென்ட் எடுக்குறப்போ சொல்லிக்கலாம் "
"சரிப்பா.. நானும் ஒரு அனாதைதான் .. அதுனால அவ என்னை அம்மானு கூப்பிட்றதுல உனக்கு ஒரு பிரச்னையும் இல்லையே. அவளை நான் என்னோட பொண்ணு மாறி பார்த்துக்குரேன்.."
"அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. அவ உங்க பொண்ணு நெனச்சுக்கோங்க அம்மா .. சாரி அத்தை .." என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்று மதியிடம் அவங்க தான் உன்னோட அம்மா , என்னோட மாமியார்.." என்று வெளியே பார்வதி கேட்டதை கூற ,மதி அவர்களை இடையோடு கட்டி அழத்தொடங்கினாள்.
ஆதி ," அத்தை , பேசாம நீங்க எனக்கு அம்மாவா இருக்கேனு சொல்லியிருக்கலாம் ..அப்போதான் இவளுக்கு மாமியார் கொடுமைன்னா என்னனு காமிச்சுஇருக்கமுடியும் "
மடியை இறுக்கிப்பிடித்தபடி தலையை மற்றும் திருப்பி , " அப்பவும் என்னோட மாமியார் எனக்குதான் சப்போர்ட் பண்ணுவாங்க .. இப்போவாச்சு மருமகன் மரியாதையை இருக்கும் .. உனக்கு அம்மா போஸ்ட் ல இருந்த , நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து உன்னை ஒருவழிஆகியிருப்போம் " என்று கூற ,
"கடவுளே,இந்த ஒரு விசயத்துல என்னை காப்பாத்திட்டே..மிக்க நன்றி .." என்று கடவுளுக்கு சத்தமாக நன்றி கூற ,
"சார் இது ஹாஸ்பிடல் .. இங்க எதுக்கு இப்படி சத்தம்போடுறீங்க.. நன்றி சொல்றதுன்னா வெளில போய் சொல்லுங்க .. கோவிலுக்கு போய் சொல்லுங்க " என்று அங்கே இருந்த நர்ஸ் திட்ட , ஆதி அசடு வழிந்தபடி சிரித்துக்கொண்டு இருந்தான்.
பார்வதியும் மதியும் அவனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர். ..

இந்த சிரிப்பு நிலைக்குமா ? ஆதி பணத்திற்கு என்ன செய்தான் ? எப்படி ஏற்பாடு செய்தான் ?
இந்த கேள்வி எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சுக்கோங்க .. போக போக சொல்றேன்...
💕💕நீயே என் இதயமடி -15💕💕 💕💕நீயே என் இதயமடி  -15💕💕 Reviewed by SaraThas on December 22, 2018 Rating: 5

10 comments:

Powered by Blogger.