💕💕💕💕💕💕💕💕💕💕மதுரை மாநகரம்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
மல்லிகைக்கு பெயர்போன மண் , கண்ணகியின் பத்தினித்தன்மையை உலகத்தில் பறைசாற்ற தன்னை நெருப்புக்கு இரையாக்கிக்கொண்ட ,தமிழ் வளர்த்த சங்கம் அமைந்துள்ள , சிவனின் மறுபாதி , சக்தியின் மறுஉருவம் மீனாட்சி அம்மனை கொண்டது மதுரை மாநகர். மாநகர் என்றாலே , மாபெரும் கோபுரங்களும் , அடுக்குமாடி கட்டிடங்களும் நிறைந்து காணப்படும். ஆனால் அதைவிட உயர்ந்தது எனது அம்மன் கோவில் கோபுரம் என்று பறைசாற்றி கொள்வோரும் , இன்றைய நவ நாகரிகத்தின் அடையாளமாய் இருக்கும் யுவ,யுவதிகளும் இன்றைய அவசர தேவைக்கான பணத்தை நோக்கி அதன் பின்னால் அலைகின்றனர்.பணம் இன்றைய உலகின் அத்தியாவசியம் . ஆனால் அதன் பின்னால் ஓடி , இருக்கின்ற இளமை , குடும்பம் ,நண்பர்கள் , சந்தோசத்தை தொலைத்து விட்டு முதுமையில் தனிமையில் வாடும்போது இந்த பணம் வெறும் காகிதமாக தெரியும். நமது கதை , இந்த மாநகரை விட்டு தொலைவில் அமைந்துள்ள பசுங்குடி என்னும் கிராமத்தில் தொடங்கிறது.
பெயருக்கு ஏற்றார் போல , எந்த திசை நோக்கிலும் பச்சை நிற போர்வை உடுத்தி , பூமாதேவி உறங்கும் அழகை பார்க்க இரண்டு கண்கள் பத்தாது. இப்போதே இப்படி என்றால், நமது கதையின் நாயகி பிறக்கும் போது இந்த ஊர் மதுரைக்கே அன்னமிட்ட ஊராக இருந்துஇருக்க வேண்டும்.பசுங்குடியினுள் உள்ளே செல்ல செல்ல , மண் மணம் தென்றலோடு நமது முகத்தை தழுவ , 'வாவ் .சூப்பர் , அருமையாக இதமாக இருக்கிறது . பணம் செலவழித்து இருக்கும் காற்றை குளிரூட்டி கிடைக்கும் ஏசியின் காற்றை விட , இந்த தென்றல் தீண்டும் பொழுது கிடைக்கின்ற சுகமே தனி என்று எண்ண தோன்றும். இப்படியே இயற்கையிலே வாழ்ந்து இயற்கையை தாய் மடியாய் கொண்ட நாயகி 25 வருடங்களுக்கு பிறகு இந்த மண்ணில் அடிஎடுத்து வைக்கிறாள்.
தனது காரில் சென்று , அந்த ஊரை சுற்றி , அதன் மாற்றங்களை பார்த்துக்கொண்டே ,பெரிய வீட்டின் மீது கண் வைத்தவாறே , தனது வீட்டின் முன் நிறுத்தினாள்.அவளது குழந்தைகள் ராம் ,மைதிலி இறங்கி வாசலில் நின்று கொண்டு இருந்த அம்மாச்சியிடம் "பாட்டி... " என்று அவர்களை தழுவி தங்களது வருகையை தெரிவித்தனர். பாட்டியும் தனது கொள்ளுமக்களை பார்த்த மகிழ்ச்சியில் , சந்தோசமாக இருக்க , உள்ளே வராமல் காரிலே அமர்ந்துஇருந்த தனது பேத்தியை பார்த்து , " அம்மாடி , வந்துட்டியா .. இந்த கிழவியை பார்க்க உனக்கு இப்போதான் நேரம் கிடைச்சுதா..என்னை மன்னிச்சுடுடி.. " என்று கை எடுத்து கும்பிட , " கிழவி .." என்று தனது பாட்டியை அணைத்துக்கொண்டு அழுதாள் மரகதவல்லி.
தனது சொந்த மண்ணின்மீது கால் வைத்தவள் , அதனால் ஏற்படும் பழைய நிகழ்வுகளை நினைத்து மனம் மீண்டும் கல்லாக , தள்ளாத வயதில் , இருக்கும் தனது பாட்டியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். ஊரில் மரகதவல்லியை தெரிந்தவர்கள் , அறிந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்ல , இரவு மட்டுமே சற்று தனிமை கிடைத்தது.
ராமும் மைதிலியும் அம்மா ஏன் இத்தனை வருடங்களாக இங்கே வரவில்லை ,இதைக்கேட்டால் ,இதற்கு பதில் நீங்கதான் சொல்லுவீங்கன்னு சொல்லிட்டாங்க. நீங்களும் உங்கஅம்மா இங்க வந்தாதான்னு சொல்லிடீங்க . இப்போ அம்மாவும் வந்தாச்சு.எங்களுக்கு அந்த கதையை சொல்லுங்க.. இப்போவே ... என்று கிழவியை கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய , அதை பார்த்தபடி பின்னால் உள்ள வாசலில் அமர்ந்து தனது நட்டு வளர்த்த மரங்களை பார்த்துக்கொண்டு இருந்தாள்.பாட்டியும் தனது பேத்தியை பார்த்தபடி ,
எப்படி துரு துருவென்று இருந்த பெண் , இன்று இந்த குடும்பம் ,குழந்தை என்று பொறுப்புகளை சுமந்து அன்பின் உருவமாய் மாறியிருக்கிறாளே..இந்த பெண் தான் எத்தனை கஷ்டங்களை அனுபவித்து விட்டாள்.. இதை இவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.என நினைத்து சொல்றேன் என்று கதையை கூற தொடங்கினர்.
அது ஒரு அழகான காதல் கதை. காதல் என்ற சொல்லே கசந்துஇருந்த இந்த ஊரில் பிறந்து , காதலுக்காக என்னவேணாலும் செய்யலாம் என்று நிரூபித்த ஒரு பெண்ணின் கதை இது ..
கதை ஸ்டார்டிங் எப்படி இருக்கு ?இனிவரும் பதிவுகளில் பாட்டி சொல்லும் கதையை நாமும் கேட்போம்..
ஒரு காதல் கதை - காதல் 1
Reviewed by SaraThas
on
December 08, 2018
Rating:
Reviewed by SaraThas
on
December 08, 2018
Rating:

No comments: