குழந்தைகள் வாழ்வின் பொக்கிஷங்கள். பெற்றோர்க்கு என்றுமே தங்களது குழந்தைகளின் நலனை தவிர வேறு எதுவும் கருத்தில் படாது. இறைவன் அனைவரையும் கவனித்துக்கொள்ள , அவர்களுக்கென்று இருவரை நியமித்தான்.. உங்களது ரத்தத்தில் இருந்தே அவர்களுக்கு உயிர் குடுக்க செய்தான்.அதையே உணவாகவும் மாற்றி வயிற்றில் இருக்கும் கருவிற்கு வழங்கவும் செய்தான்.
உங்களால் உங்களில் இருந்தே இந்த உலகத்திற்கு வரும் உயிரை பெற்றோர்களான நீங்கள் அன்பாக பார்த்துக்கொண்டு , நல்லதை போதித்து , அவர்கள் வளரும்வரை துணையை இருந்து இருக்க வேண்டிய பெற்றோர்கள் , பணம் என்னும் மாயா வலையில் விழுந்து தனது மகளையே துன்புறுத்தும் தகப்பன்..
தாய் இருந்தும் இல்லாமல் தவிக்கும் மகள் , வாழ்வு முழுக்க துன்பத்தை அடைந்து தவிக்கிறாள் மீளவழிதெரியாமல் ...
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று நினைத்து கடவுளை வணங்குகிறாள்.. கடவுள் என்றும் நேராக வந்து அவளை காப்பாற்ற போவதில்லை. சூழ்நிலைகளை அமைத்து , அதெற்கென்று விதியால் ஒருவரை நியமித்துவிடுவார்.. அந்த விதி இவளுக்கு நன்மை பயக்குமா ? கடவுள் கை விடுவாரா ? காப்பாற்றுவாரா ? கடவுள் காட்டும் விதியை உணர்த்துக்கொள்வாளா ?
பார்ப்போம் கடவுளின் கைகளில் தனது வாழ்வை ஒப்படைத்த பேதைப்பெண்ணின் கதை இது ..
கதையின் நாயகன் பற்றி :
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை ,
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை ..
அந்த கடவுளும் இல்லை ...
மாதா பிதா குரு தெய்வம் இவற்றில் இது எதையுமே அறியாதவன்..தாயின் அன்பு , தந்தையின் அரவணைப்பு , உடன்பிறப்புகளின் பாசம் , உறவினர்களின் நட்பு , மனைவியின் தீரா காதல் இவை எல்லாம் சரியாக ஒருவனுக்கு அமைந்து விட்டால் வாழ்வில் வேறு சுகம் தேவையில்லை ..
ஆனால் இவை எல்லாம் கிடைக்கப்பெற்றவனோ , அனைத்தையும் துறந்து தனக்கு பிடித்தபடி வாழ்கிறான்.. அவனை பொறுத்தவரை பணம் தான் எல்லாம் ...பணத்திற்காக தன்னை சுற்றி உள்ள அனைவரும் எது வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள் என்று அறிந்து அவர்கள்மீது வெறுப்பை உமிழ்ந்தான்..
பொருள் கொண்டு வந்துவிட்டால் தந்தை ..
பொருள் கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் ..
சீதனத்தை எதிர்பார்க்கும் தங்கை ..
கொலையும் செய்வாள் பத்தினி ..
உயிர்காப்பான் தோழன் ..
என்ற கருத்தை முழுதாக ஒத்துக்கொண்டு அவனது வாழ்வு அவனது இஷ்டம் என்று சுற்றிக்கொண்டு இருக்கிறான்..
பெற்றோரும் மற்றோரும் அவனிடம் பேச, அவனது செயல்கள் அதிகரித்ததே தவிர குறையவில்லை ..
மனைவி இருந்தால் அவனை நல்வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்து அவனிடம் பேச, அவன் மனைவி என்று யாரும் என்னிடம் உரிமை கொண்டாட முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டு சென்று விட்டான் .. அனைவரும் சோர்ந்து விதியின் கையில் அவனது வாழ்க்கையை ஒப்படைத்தனர்
விதி அவன் வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணுமா.....பார்ப்போம்

No comments:
Post a Comment