அருண் , அவளை முதன்முதலாக பார்க்க போகும் சந்தோஷத்தில் , இரவெல்லாம் தூங்காமல் அடிக்கடி எழுந்து மணி பார்த்துக்கொண்டே இருந்தான்.
காலை மணி 5 அடிக்க , அரக்க பறக்க எழுந்து கொண்டான். அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பு வந்தது. விடலை பையனை போல் தான் இப்படி நடந்துகொள்வது விசித்திரமாக இருந்தது.
பால்கனி கதவை திறந்து அதிகாலை குளிரை ரசித்துக்கொண்டே ஜாக்கிங் செல்ல கிளம்பினான்.
பீச்சில் , ஜாகிங் செய்து கொண்டே ஒருஇடத்தில் அமர்ந்து , கடல் அலையை ரசிக்க தொடங்கினான்.சூரியன் உதிக்க ஆரம்பித்த நொடி , கீழ்வானம் செவ்வானம் ஆக மாற , அதை மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான். 'gapeee .. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுயிருக்கு டி' லவ் யு டி ' ...... என்று கத்த .., அங்கே வாக்கிங் போய்க்கொண்டு இருந்தவர்கள் விசித்திரமாக பார்க்க , அவன் சிரித்துக்கொண்டே அவனது gappee யை நினைக்க தொடங்கினான்..
வீட்டிற்கு வந்து , இரவிற்கான எல்லா வேலைகளையும் தயார் செய்தான். அவனது அம்மாவிடம் கூறிவிட்டு , எல்லாவற்றையும் செய்ய முன்னதாகவே கிளம்பினான் .. என்ன ஒரு 12 மணி நேரம் முன்னதாக வந்துவிட்டான். அவள் இன்று முழுவதும் எனக்கு கால் செய்யக்கூடாது என்று.. அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் , இவனாக யோசித்து யோசித்து யோசித்து அதன் படி செய்தான்.. அவன் எல்லாவற்றையும் செய்து முடிக்க , இரவு மணி 6 ஆனது.
அதே நேரம் மது , அந்த போட்டோவில் இருந்த அவனிடம் , ' இன்னிக்கு அவன் நான் யாருனு தெரிஞ்சுக்க போறான். கண்டிப்பா இன்னிக்கு ப்ரொபோஸ் பண்ணுவான்.. நான் சொன்ன மாறி 30வது நாள் இன்னிக்கு .. நான் நெனச்ச மாறி எல்லாமே நடந்துட்டு வருது..ஆனால் என்னால அவனை பக்கத்துல பாக்க கூட முடியல.. அவன்கிட்ட வந்த நெருப்பை தொடுறமாறி இருக்கு. ' என்று அவனுடன் தனது மனக்குமுறல்களை பொலம்பிக்கொண்டு இருந்தாள் .
இரவு ஏழு மணி ..
அந்த 5 ஸ்டார் ஹோட்டலின் உயரமான தளத்தை பதிவு செய்து அதற்கான அலங்காரத்தை பார்த்து பார்த்து பார்த்து செய்துகொண்டு இருந்தான்..
அவள் உள்ளெ வந்துவிட்டதை அறிந்ததும் , அவளுக்கு ஒரு மாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை அவள் அணிந்து கொண்டு அங்கே உள்ள கதவை திறக்க , அவள் மீது ரோஜா இதழ்கள் விழ , அவள் ரெட் கார்பெட் மீது நடந்து வந்து கொண்டு இருந்தாள். இரண்டு அடி எடுத்துவைத்ததும் அவள் மீது மல்லிகை பூக்கள் கொட்டியது.. அடுத்த இரண்டு அடி வைத்ததும் அவள் மீது ஜாதிமல்லி பூக்கள் விழ ,அதையும் தாண்டி , அவள் மனதிற்குள் இன்னும் எவ்ளோ தான்டா இருக்கு ' என்று சிரித்துக்கொண்டே அவள் முன்னேறி செல்ல .. அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு , அவள் நின்ற இடத்தில் மட்டும் ஒளி வீசப்பட்டது. கருப்பு நிற கோட்டில் , முகத்தில் மாஸ்க் அணிந்து ஒரு உருவம் அவளை நோக்கி வந்தது.. அருண் தான்.. அவன் வர வர அந்த வெளிச்சம் அவனுடனே வந்து அவள் நின்ற இடத்துடன் கலந்தது.
அவன் அவளை மேலும் கீழும் பார்க்க , ரெட் கலர் லாங் கௌனில் இருந்த அவளை பார்த்து , அவளது இடையை பிடித்து அழுத்தியது. அவளது கையை எடுத்து தன் தோள் மீது வைத்து ,இன்னொரு கையை பிடித்துக்கொண்டு இருவரும் அடுத்தவரது கண்ணை அந்த மாஸ்க் மூல ம் பார்த்துக்கொண்டு மெதுவாக நடனம் ஆட , பின்னால் இசை வாசிப்புடன் கூடிய பாடல் ஒலித்துகொண்டு இருந்தது.
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே)
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
அவர்கள் ஆடி முடித்ததும் , இருவர்மீது ஏற்பட்ட வெளிச்சம் அணைக்கப்பட்டு , அவர்களை சூழ்ந்து மெழுகு வர்த்தி மூலம் ஒளிபரப்ப அந்த இடத்தில் 'I Love You ' என்ற வாசகம் ஹார்ட் வடிவில் சூழப்பட்டு அழகாக காட்சி அளித்தது.
அருண் குனிந்து , அவள் முன் மண்டியிட்டு , ' நான் இதுவரைக்கும் உன்ன பார்த்தது இல்லை ..நீ எப்படி இருப்ப , எதுவுமே எனக்கு தெரியாது ஆனால் நீதான் என்னோட வாழ்க்கை முழுசுக்கும் நான் முடிவு பண்ணிட்டேன். என்னோட சேர்ந்து என்னோட வாழ்க்கையை நம்ம வாழ்க்கையா மாற்றி அதில் பயணிக்க வருவாயா ' என்று இரு கை களை விரித்துகொண்டு கொண்டு கேட்க ,
'கண்டிப்பா ..' என்று அவனை தழுவிக்கொள்கிறாள் மது.. இருவரது அணைப்பும் இறுக , அருணின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி , சந்தோசம் , என பலவகையான உணர்வுகள் ..
மதுவின் முகத்திலோ , அவன் இறுக்கி பிடித்ததால் வந்த கோபமும் , ஏற்கனவே இருந்த வெறுப்பும் , கண்ணீரை வெளியேற , இருவரது உணர்ச்சிகளையும் சிரித்துக்கொண்டே மாஸ்க் மறைத்தது.
இருவரும் விலகி , தங்களது மாஸ்க்கை கழட்ட . ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இருவருக்கும் ஆனந்தம் , சந்தோசம் , கண்ணீர் , இப்படி பலவகையான உணர்வுகள்.. திடீரென்று ஒரு அதிர்ச்சியான விஷயம் நம்மை திக்குமுக்காட செய்வது போல இருந்தது..
அருண் : நீதானா அது .. நிஜமா நீதானா ..
மது : நீதானா அது .. நிஜமா நீதானா என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்க , சிரித்துவிட்டு தங்களுடைய கதைகளை பகிர்ந்துகொண்டனர்.
அருண் : உனக்கு ஒரு surprise வச்சுஇருக்கேன் ..
மது : என்ன அது ..
அருண் : பர்ஸ்ட் நாம சாப்பிடுவோம் ..என்று அவளை அமரச்செய்து தனது கைகளால் பரிமாறினான் ..
💕💕நீயே என் இதயமடி-8 💕💕
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:
Reviewed by SaraThas
on
December 15, 2018
Rating:

No comments: